சிரியாவில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 23 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் வடபகுதி நகரான ரக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பதாக நம்பப்படும் பகுதியில் இன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 23 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் எட்டு சிறுவர்களும் அடங்குவர்.

தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின்போது தாம் மிகுந்த கவனத்துடன் செயற்படுவதாகவும், கூடியவரையில் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதாகவும் கூட்டுப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கொல்லப்படும் பொதுமக்கள் தொடர்பில் இராணுவம் குறிப்பிடும் எண்ணிக்கைகள் உண்மைக்கு மாறாக இருப்பதாக கண்காணிப்புக் குழுக்கள் தெரிவிக்கின்றன.