முல்லைத்தீவு  முறுகண்டிப் பகுதியில் இன்று முற்பகல்   ரயிலுடன், வேன் ஒன்று மோதியதில்  வேன் சாரதி  அதிர்ஷ்டவசமாக  காயங்கள் ஏதுமின்றி  உயிர்  தப்பியுள்ளார்.

ஸ்கந்தபுரம்  பகுதியில் ,இருந்து கிளிநொச்சியை  நோக்கி வந்துகொண்டிருந்த  வேன் முறுகண்டிப்பகுதியில் உள்ள  ரயில் கடவையை  கடக்க முயன்றபொழுது  கடவையில்  இருந்த  சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால்,  யாழில் இருந்து கொழும்பு  சென்றுகொண்டிருந்த  ரயிலுடன் மோதுண்டு  விபத்துக்குள்ளானதாக  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேனில்  சாரதி மட்டுமே  பயணித்தமையால்  உயிர்ச் சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை.