ஹட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான சண்முகம் கணேசன் நேற்று இரவு 10 மணியளவில் இயற்கை எய்தியுள்ளார்.

இவர் எமது மலையக பிராந்திய ஊடகவியலாளரான க.கிஷாந்தனின் தந்தையும், திருமதி. சாந்தினியின் கணவனுமாவார்.

ஸ்டோனிகிளிப் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இவர் இதற்கு முன்னர் களஞ்சிய அறை கட்டுப்பாட்டாளராகவும், கணக்காய்வாளராகவும் கடமைபுரிந்திருந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை சனிக்கிழமை (11) காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்டத்தின் இல்லத்தில் இடம்பெற்று தகன கிரியைகள் கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறும் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.