களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சந்தேக நபர் எவரும் கைதுசெய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள உலகக் குழு நபரான சமயங், சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உட்பட ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்துள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சம்பந்தப்பட்ட அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.