இரணைத்தீவு எமது பூர்வீக நிலம்… எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்கு..!

Published By: Robert

08 Mar, 2017 | 04:27 PM
image

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவில் மீள்குடியமர்த்துமாறு தெரிவித்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைத்தீவு எமது  பூர்வீக நிலம்… எமது நிலத்தில் குடியிருக்க அனுமதி வழங்கு எனத் தெரிவித்து  பூநகரி  மகா வித்தியாலயத்திற்கருகில்  அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி பூநகரி பிரதேச செயலகத்தை  சென்றடைந்தது அங்கு ஜனாதிபதி, வடக்கு முதலமைச்சர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கான மகஜர்களும் பிரதேச செயலர் கிருஸ்ணாந்தராஜாவிடம் கையளிக்கப்பட்டது.

இரணைத்தீவு 1992 ஆம் ஆண்டு தொடக்கம் கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பூநகரி முழங்காவில் பிரதேசத்திற்கு அருகில் இரணைமாதாநகரில்  வசித்து வருகின்றனர். இவர்களின் ஒரேயொரு தொழில் கடற்றொழிலாகும். தற்போது இந்த மக்கள் நாள்தோறும் இரணைமாதா நகரிலிருந்து  கடற்கரைக்கு  சிரமங்களுக்கு மத்தியில்  நடந்துசென்று  தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

1992 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இரணைத்தீவில் இருந்து வெளியேறி 240 மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு இரணைமாதாநகரில் வாழ்ந்து வருகின்றனர் இந்த மக்களே தங்களின் பூர்வீக நிலமான இரணைத்தீவை மீட்டு சொந்த நிலத்தில் மீள்குடியேற்ற வேண்டும் என கோரி யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இது வரை எதுவும் நடக்கவி;லலை இந்த நிலையிலேயே கவனயீர்ப்பு பேரணியை நடத்தியுள்ளனர். 

இதேவேளை இரணைத்தீவில் உள்ள தேவாலயதின் திருவிழாவுக்கு மாத்திரம் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44