இன்று மதியம் லக்ஸபானா  வீதி,  காத்தார் சின்னகுளம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் பிரவீனன் என்ற ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது,

இன்று மதியம் பலியான குழந்தையின் தந்தையார் வேலைக்கு சென்றிருந்ததாகவும் தாயார் சுயவேலை காரணமாக நகரத்திற்கு சென்றிருந்த வேளை குழந்தை தனது அம்மம்மாவுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை விளையாடி கொண்டிருந்தத போது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மாணிக்கப்படாத பாதுகாப்பற்ற கிணறு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது குழந்தையின் சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.