(ஆர்.ராம்)

தொடர்ச்சியாக பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமையால் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை நிலையியற் கட்டளை சட்டத்தின் 74/1 கீழ் பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு சற்றுமுன்னர் பிரப்பித்துள்ளார்.

தினேஸ் குணவர்தனவை வெளியேற்ற படைக்கள சேவகர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் முதலில் ஏற்பட்ட அமளிதுமளியை தொடர்ந்து சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பித்த போது விமல் வீரவன் மற்றும் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து தமது பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்குமாறு கோரி கோஷமெழுப்பியதால் சபையில் பதற்றநிலை ஏற்பட்டது.

இதனால் சபையை மீண்டும் சபாநாயகர் 10 நிமிடத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.