அட்டன் டிக்­கோயா தோட்­டத்­தி­லி­ருந்து சவூதிக்கு பணிப்­பெண்­ணாக சென்று மீண்டும் நாடு திரும்­பிய பெண் இது­வரை வீடு வர­வில்லை என பெண்ணின் மாம­னா­ரான ஆறு­முகம் பச்­சை­முத்து அட்டன் பொலிஸ் நிலை­யத்தில் முறை­ப்பாடு ஒன்றை பதிவு செய்­துள்ளார்.

2013ஆம் ஆண்டு டிக்­கோயா தோட்­டத்­தி­லி­ருந்து லெட்­சு­மணன் சிவ­காமி (வயது 29) என்ற பெண் சவூதி அரே­பி­யா­விற்கு இரண்டு வருட ஒப்­பந்த அடிப்­ப­டையில் தொழி­லுக்கு சென்றார். இவ்­வாறு சென்ற பெண் கடந்த 2015.10.08ஆம் திகதி தனது ஒப்­பந்த காலம் முடி­வுற்ற பின் நாடு திரும்­பி­யுள்ளார்.

ஆனால் நாடு திரும்­பிய பெண் இது­வரை வீடு வந்து சேர­வில்லை என தனது மாம­ னாரால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. மட்­டு­மன்றி தேடு­தலும் இடம்­பெற்று வரு­வ­ தாக தெரி­ய­வந்­துள்­ளது. இரண்டு பிள்­ளை­களின் தாயான சிவ­கா ­மியின் கணவர் சுதாகர் (வயது 36) 14 மற்றும் 5 வயதில் ஆண் பிள்­ளைகள் இருவர் தனது தாத்தா பாட்­டியின் அர­வ­ணைப்பில் வாழ்ந்து வரு­கின்­றனர். மரு­மகள் 2013ஆம் ஆண்டு வெளி­நாட்­டுக்கு சென்­றபின் 10 மாதங்கள் கடந்து ஒரு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் ரூபாய் பணம் மாத்­தி­ரமே எமக்கு கிடைக்­கப்­பெற்­றது.

இத்­தொ­கை­யினை கொண்டு பிள்­ளை­களின் கல்வி நட­வ­டிக்கை மற்றும் குடும்ப செலவு போன்­ற­வற்றை மேற்­கொண்டு வந்­த­தா­கவும் மேல­ திக குடும்ப செல­வுக்­காக வயது போன நாங்கள் நக­ரத்­திற்கு சென்று கூலி வேலை செய்து வரு­மா­னத்தை பெற்று வந்­த­தா­கவும் பொலிஸ் முறை­பாட்டில் மாமனார் குறிப்­பிட்­டுள்ளார். இருந்தும் கடந்த பத்தாம் மாதம் நாடு திரும்­பிய எனது மரு­மகள் இன்னும் வீடு திரும்­ப­வில்லை. ஆகையால் இவர் தொடர்பாக விடயங் கள் அறிந்தவர்கள் பொலிஸாருக்கு தெரி விக்கும்படி மாமனார் கேட்டுள்ளளார்.