கொழும்பு ஒருகொடவத்தையில் உள்ள கொள்கலன் தளத்திலில் வைத்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் 200 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த சிகரெட்டுகளை இன்று (08)கைப்பற்றியுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த சிகரெட்டுகள் மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் தளத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.