கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அரசடி மருத்துவ பீடத்திற்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி மட்டக்களப்பு நகர் வரை சென்று மீண்டும் மருத்துவபீடத்தை அடைந்தது.

இலங்கையில் நிறுவியுள்ள தனியார் மருத்துவ கல்லூரியை எதிர்த்தே இவ்ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரார்கள் தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தின் போது தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் மும்மொழிகளிலுமான பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

- ஜவ்பர்கான்