வைத்திய அதிகாரிக்கு எதிராக தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்.!

Published By: Robert

08 Mar, 2017 | 12:22 PM
image

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தினை சேர்ந்த 300 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இத்தோட்டத்தில் இருக்கின்ற தோட்ட வைத்திய அதிகாரி முறையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லையெனவும் இதனால் தாங்கள் சுகாதார விடயத்தில் அதிகமான பாதிப்புகளை சந்திப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 5 ஆம் திகதி இத்தோட்டத்தில் உள்ள ஆற்றில் 17 வயதுடைய மாணவன் குளிக்கச்சென்று சுழியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அப்போது தோட்ட வைத்தியரை அழைத்தபோது வைத்தியர் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. இதனை கண்டித்தும் வைத்தியர் அடிக்கடி தோட்டத்தில் இருப்பதில்லையெனவும் வைத்தியரின் நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் கண்டுக்கொள்வதில்லை.

எனவே குறித்த வைத்திய அதிகாரியை தோட்டத்தினை விட்டு இடமாற்றம் செய்யுமாறு கோரியே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தோட்டத்தில் உள்ளவர்களுக்கு நோய்கள் ஏற்படும் போது வைத்திய அதிகாரியால்  பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் அசமந்தபோக்கில்  இருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

சம்பந்தப்பட்ட வைத்தியர் அரச சார்பற்ற நிறுவனங்களை இணைத்துகொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி கடன் வழங்கி அதிகப்படியான வட்டி பணம் அறவிடுவதாகவும் பெற்றப்பணத்தினை மீளச்செலுத்த முடியாதவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்வதோடு வழக்கு தாக்கல் செய்வதாகவும் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தோட்ட தொழிலாளர்கள் கவலை அடைகின்றனர்.

தோட்ட வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்ப்பாட்டத்தினை தொடர்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08