பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் மற்றும் 5 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தமைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர்  எல்.எச்.ஜி. குரே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எம்.எச்.புத்திக சிறிவர்தன, சமன் யடவர மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களான கே.டி. அனில் பிரியந்த, ஆர்.பீ.எச்.ஏ.பிரஹமான, எம்.என்.எஸ். மெண்டிஸ், ஏ.ஜே.யு.சி. ஹேரத் மற்றும் டபுள்யூ.எம்.ஏ.ரொஹான் பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.