இந்திய கடற்படையால் இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது..! 

Published By: Selva Loges

08 Mar, 2017 | 11:04 AM
image

இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி, இரண்டு படகுகள் மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட 10 இலங்கை மீனவர்களை, இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  திருகோணமலையிலிருந்து கடந்த 3 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்களே நாகபட்டின கடற்பரப்பில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் காரைக்கால் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

கச்சத்தீவு கடற்பிராந்தியத்தில் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி ஒரு மீனவர் இறந்ததாக கூறப்படும் நிலையில், இருநாட்டு கடற்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி,  தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37