பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் மர்ம நபர்கள் 7 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 158க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளதோடு 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற திரையரங்கிற்குள் நுழைந்த நபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளார்.
இதில்  26 பேர்பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பின்னர் 158 ஆக பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் 100 பேர் பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலாண்ட் பிரான்சில் தற்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்