தமிழக மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவம் தொடர்பில் கருத்து மீனவர் ஒருவர்,

'ரஞ்சி கடலோரமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். இதன்போது அங்கு கத்தி, அறுவாள், துப்பாக்கிகளோடு வந்த நான்கு நேவி எங்கட ஐந்து படகுகளை அடித்து தகர்த்தினார்கள். நாங்கள் அவர்களிடமிருந்து தப்பித்துகொள்வதற்கு முன்னதாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் என்னுடன் இருந்தவர் கழுத்தில் சூடு பட கீழேவிழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். இதற்கு பிறகு எமது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சகல பொருட்களை அங்கேயே போட்டு விட்டு வந்துவிட்டோம். எங்கட நேவி எல்லை கோட்டுல இருக்கல என்றார்.

தமிழகத்தின் இராமேஸ்வர மாவட்டத்தின் தங்கச்சிமடம் பகுதியிலிருந்து கச்சத்தீவு அருகேவந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரிட்கோ எனப்படும் மீனவர் நேற்றிரவு 8.30 மணியளவில் இலங்கை கடற்படையால் சுடப்பட்ட நிலையில் இறந்துள்ளதாகவும், அவருடன் வந்த சரவணன் என்பவர் காயமுற்றுள்ளதாகவும் இந்திய மீனவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் குளஞ்சிநாதன் இந்திய ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ளார். 

இருப்பினும் கண்காணிப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் யார் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என கடற்படை பேச்சாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.