சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, முழுக்க முழுக்க பெண் பணியாளர்களே இயக்கும் விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் நடத்தியுள்ளது.

புதுடெல்லியில் இருந்து கடந்த திங்களன்று சென் பிரான்சிஸ்கோவுக்குப் பறந்த எயார் இந்தியாவுக்குச் சொந்தமான 737 ரக போயிங் ஜெட் ரக விமானத்தில், விமானிகள் உட்பட அனைத்துப் பணியாளர்களும் பெண்களே! பசிபிக் சமுத்திரத்துக்கு மேலாக நீண்ட நேரம் பறந்த இந்த விமானம் பத்திரமாக சென். பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது.

இதையடுத்து சுமார் மூன்று நாட்கள் கட்டாய ஓய்வு எடுத்துக்கொண்ட பெண் விமானச் சிப்பந்தியினர், மீண்டும் கடந்த வியாழனன்று சென் பிரான்சிஸ்கோவில் இருந்து புது டெல்லி பயணமானார்கள். இவர்களது விமானம் மறுநாள் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று புது டெல்லியை வந்தடைந்தது.

விமானத்தின் உள்ளே மட்டுமன்றி, விமானத்தைப் பரிசோதனை செய்த பொறியியலாளர்கள், தரைக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பெண் பணியாளர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.