ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் புலிகளின் ஆயுதத்தை ஆயுதக் குழுக்களுக்கு விற்றுள்ளனர் : சம்பிக்க

Published By: Priyatharshan

06 Mar, 2017 | 03:32 PM
image

(ஆர்.யசி )

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கு விற்றிருக்க வேண்டும். ஏனெனில் இன்று பாவனையில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆயுதங்களும் புலிகளின் ஆயுதங்கள். அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பாட்டலி  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொட்டவா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஆரம்பத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சி காணப்பட்டது. அப்போது ஆயுதங்களுடன் அவர்கள் போராடி மக்களை வீதிகளில் கொன்று போட்டனர்.

பின்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் காணப்பட்டது. இவற்றை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை இவ்வாறு ஆயுதக் குழுக்களுக்கு விற்றிருக்க வேண்டும். ஏனெனில் இன்று பாவனையில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆயுதங்களும் புலிகளின் ஆயுதங்கள். அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆகவே இவை கண்டறியப்பட வேண்டும். அதேபோல் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவந்ததை போலவே இந்த பாதாள கோஷ்டிகளின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இன்று நாட்டில் மோசடிக்கார குழுக்களும் ஆயுதக் குழுக்களும் அதிகளவில் உருவாக்கம் பெற்றுள்ளன. நாட்டில் சகல பகுதிகளிலும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதங்களை பாதாள கோஷ்டிகளுக்கு பணத்திற்கு விற்றுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது.

நாட்டில் அமைதியை உருவாக்கவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். எனினும் ஒருசிலர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதில் அரசியல் வாய்ப்புக்களை உருவாக்க முயற்சிக்கின்றமை நன்றாக வெளிப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35