மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசமான நாவலடி கடலில் பெருமளவு நெத்தலி மீன்கள் இன்று காலை பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

காலநிலை மாற்றத்தினால் மீன்பிடித் தொழிலின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மீனவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று இவ்வாறு அதிகளவில் மீன்கள் பிடிப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பிடிக்கபட்ட அதிகமான நெத்தலி மீன்களை உடனடியாக விற்பனை செய்யமுடியாமையினால் கடற்கரையேரத்தில் கருவாடாய் மாற்றும் நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இம் மாவட்டத்தில் வழமைக்கு மாறாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கடந்த பல மாதங்களாக இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.