பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சட்டத்தரணி இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

சட்டத்தரணி இல்லாமல் வழக்கு தொடர்பில் விளக்கமளிக்க இடமளிக்குமாறு இவர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இதனால் இவரது வழக்கை சற்றுநேரத்துக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த  ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது