நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண்ணனிற்கு, சம்பளம் கொடுக்காமல் வந்த அவரின் எஜமானியை 1.6 மில்லியன் கொடுக்கும்படி அந்நாட்டு சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது: இலங்கையை சேர்ந்த பணி பெண் ஒருவர், சுமார் நான்கு வருடங்கள் பணிபுரிந்து வந்த நிலையில் அவரது மாத சம்பளம் சேமித்து வைக்கப்படுகிறதாக, அவரது எஜமானியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நான்கு வருடங்கள் முடியவே, தான் இலங்கை திரும்ப வேண்டுமெனக்கூறி தனது சம்பள பணத்தை கேட்கவே, அவரை அடித்து மிரட்டியதாக முறைப்பாடொன்றை முன்வைத்து, குறித்தப் பெண் இலங்கை துதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து இலங்கை தூதரகம் மற்றும் அந்நாட்டு பொதுத்துறை மற்றும் வதிவிட விவகார தலைவர் தலால் மாஅரபியுடன் இணைந்து கொடுத்த முறைப்பாட்டை அடுத்து, குறித்த எஜமானினியிடம் அந்நாட்டு அதிகாரிகள் பேசிய நிலையில், இலங்கை பணிப்பெண்ணிற்கு இலங்கை பெறுமதிப்படி 16 இலட்சத்தை கொடுப்பதற்கு குறித்த எஜமானினி சம்மதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.