வரையறுக்கப்பட்டுள்ள  மருத்துவர் கட்டணம்  

Published By: MD.Lucias

07 Jan, 2016 | 09:29 AM
image

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சோதனைகளை (செனலிங்) மேற்கொள்ளும் வைத்திய நிபுணர்களின் கட்டணத்தை ரூபா 2000 ஆக வரையறுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நோயாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தற்கமைய விசேட வைத்திய நிபுணர்களின் சேவையை பெற்றுக் கொள்ளும்  நோயாளர்களிடமிருந்து வைத்தியர்  கட்டணமாக 250 ரூபா தொடக்கம் ரூபா 2000 வரை அறவிடப்படலாம். 

விசேட வைத்திய நிபுணர் கட்டணம் உட்பட அதற்குரிய வைத்தியசாலை கட்டணமாக ரூபா 100 தொடக்கம் ரூபா 500 வரை நோயாளியிடமிருந்து கட்டணமாக பெற்றுக் கொள்ள முடியும்  என சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குப்படுத்தல் சபையின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் காந்தி ஆரியரத்தின தெரிவித்துள்ளார். 

இதற்கமைய எதிர்காலத்தில் விசேடத்துவ வைத்திய நிபுணரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நோயாளர் டாக்டருக்கும், வைத்தியசாலைக்கும் செலுத்த வேண்டிய கட்டணம் ரூபா 2500ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நோயாளியை பரிசோதனை செய்யும்  கால எல்லை 10 நியமிடஙக்ளாக இருக்க வேண்டும். அத்தோடு தனியார் மருத்துவ சோதனை நிலையங்களில் 33 விதமான மருத்துவ சோதனைகளுக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்கமையவே தனியார் மருத்துவ பரிசோதனை நிலையங்கள் கட்டணங்களை அறவிட வேண்டும் என்றும் அக் கட்டணங்கள் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19