ஹூங்கம – கஹதமோதர பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற யுக்ரேன் நாட்டு பிரஜையொருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று கடலில் மூழ்கி அசாதாரண நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 

குறித்த மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.