ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘இதயத்திருடன்’ என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை காம்னா ஜேத்மலானி. அதனைத் தொடர்ந்து  மச்சக்காரன், ராஜாதிராஜா, காசேதான் கடவுளடா ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் போதிய வாய்ப்புகள் தமிழில் வராததால் தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தினார்.

இதனிடைய பெங்களூரைச் சேர்ந்த சுரஜ் நாக்பால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, அன்விகா என்ற பெண் குழந்தைக்கும் தாயானார். பின்னர் திருமணத்திற்கு பின்னர் நடிப்பது குறித்து யோசித்து வந்த காம்னா, தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் ஒரு ஹாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதன் மூலம் திருமணத்திற்குபிறகு மீண்டும் திரையுலகில் நடிக்க தொடங்கியிருக்கிறார் நடிகை காம்னா ஜேத்மலானி.

தகவல் : சென்னை அலுவலகம்