பாதாள உலக குழுவைச் சேரந்த 'புளுமெண்டல் பெதும்' என்ற நபர் நேற்று மாலை கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்து கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 15 துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த பொதுத் தேர்தலின் போது புளுமெண்டல் பகுதியில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கூட்டமொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இவரை இலக்கு வைத்தது நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.