அங்­க­வீ­ன­மான இரா­ணுவ வீரர்­களின் போராட்டம் யுத்த வெற்­றியை கொச்­சைப்­ப­டுத்தும் செயல்

Published By: Raam

05 Mar, 2017 | 11:36 AM
image

நாட்டில் இடம்­பெற்ற 30 வரு­ட­கால யுத்­தத்­தினை வெற்­றி­கொண்ட அபி­மானம் இலங்கை இரா­ணு­வத்தின் வச­முள்­ளது. எனவே இரா­ணுவ வீரர்கள் ஒரு போதும் தமது அங்­க­வீ­னத்தை வெளிப்­ப­டுத்தி மக்­களின் அனு­தா­பங்­களைப் பெற விரும்­பு­வ­தில்லை.

எனவே விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீரர்கள் என்ற பேரில் சிறிய குழு­வொன்று சம்­பள உயர்வின் நிமித்தம் ஆர்­ப்பாட்­டங்­களை மேற்­கொண்டு வரு­வது இரா­ணு­வத்தின் மீதான நிந்­த­னையே ஆகும் என இரா­ணு­வத்தின் ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர்  ரொஷான் சென­வி­ரத்ன தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமக்­கான ஓய்­வூ­திய தொகை முழு­மை­யாக வழங்­கப்­ப­டு­வ­தில்லை என விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீரர்கள் குழு­வொன்று ஆர்­பாட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இவர்­களின் போராட்டம் நியா­ய­மா­னது என்­பதை ஏற்­றுக்­கொள்ள  இரா­ணுவம் தயா­ராக இல்லை.

மேற்­படி ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுக்கும் தரப்­பி­ன­ருக்கு 60 தொடக்கம் 80 ஆயிரம் ரூபாய் வரை­யி­லான சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது. அவர்கள் ஒய்வு பெற்­ற­வர்கள் என்ற போதும் யுத்­தத்­தினால் தமது அங்­கங்­களை தியாகம் செய்­தவர் என்ற வகையில் அவர்­களின் மொத்த சம்­பளத்  தொகையும், அத­னுடன் கூடிய வரப்­பி­ர­சாத தொகையும் ஒய்­வூ­தி­ய­மாக வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

இவர்கள் போலவே விசேட தேவை­யு­டைய வீரர்கள் பலர் தற்­போதும் இரா­ணு­வத்­தினுள் இருக்­கின்றார். அவர்கள் தாம் அங்­க­வீ­ன­மா­ன­வர்கள் என்று காட்­டிக்­கொள்ள விரும்­பு­வ­தில்லை. காரணம் அவர்கள் இரா­ணுவ வீரர்கள் என்ற அபி­மா­னத்­தி­னையும் தாம் யுத்த்த்­தினை வெற்­றி­கொள்ள அர்­ப­ணிப்­புடன் செயற்­பட்ட வீரர்கள் என்ற அபி­மா­னத்­தையும் தக்க வைத்­துக்­கொள்ள விரும்­பு­கின்­றனர்.

அதனால் இரா­ணுவ வீரர்கள் அனு­தா­பத்தின் வழி தமது கோரிக்­கை­களை பொற்­றுக்­கொள்ள எத்­த­னிப்­பதை ஒரு­போதும் நாம் அனு­ம­தியோம். யுத்­தத்தால் அங்­கங்­களை இழந்­தாலும் சரி, உயிரை இழந்­தாலும் சரி யுத்த வெற்­றியை வசப்­ப­டுத்­திக்­கொண்டோம் என்ற கெள­ர­வத்­தினை மட்­டுமே சன்­மா­ன­மாக கொள்­ப­வர்­க­ளையே நாங்கள் இரா­ணுவ வீரர்கள் என்று வரை­ய­றுப்போம்.

அத்­துடன் தற்­போது ஆரப்­பாட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­வர்கள் 12 வரு­டங்கள் ஆகும் முன்பே சேவை­யி­லி­ருந்து அங்­க­வீ­னத்­தினை காரணம் காண்­பித்து விலகிச் சென்­ற­வர்கள். அதனால் தற்­போது சேவையில் உள்­ள­வர்­களின் சம்­ப­ளத்­தினை பார்க்­கிலும் விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீரர்கள் சம்­பளத் தொகை அதிகமாகும். அதனையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.

மேற்படி செயற்பாடுகளின் காரணமாக விசேட தேவையுடைய இராணுவ தரப்பு முழுவதையும் அவமானப்படுத்திக்கொண்டுள்ளனர். இது நாட்டின் சட்டத்திற்கும் இராணுவச் சட்டத்திற்கும் முரணானதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47