ருவன்வெல்ல – அமித்திரிகல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளதோடு 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவனொலி பாத யாத்திரைக்கு சென்று திரும்பிய வேன் ஒன்று பேரூந்து ஒன்றுடன் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த விபத்தின் போது வேன் சாரதி மற்றும் அதில் பயணித்த இருவர் விபத்தில் பலியாகியுள்ளதாகவும்,சம்பவத்தில் காயமடைந்த 6 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.