மஹரகம பிரதேசத்திலுள்ள ஆடையகமொன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ பரவலினை கட்டுப்படுத்துவதற்காக கோட்டே தீயணைப்பு படையினரின் 3 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தீ பரவலினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் அறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.