காணாமல் போன உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பேரணி

Published By: Ponmalar

04 Mar, 2017 | 02:37 PM
image

வவுனியாவில் கடந்த 9 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இன்று (04) காலை வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆதரவு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த பேரணி வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி புகையிரத நிலைய வீதியூடாக, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக பசார் வீதி சென்று, இலுப்பபையடியூடாக நீதிமன்ற வழியாக போராட்டம் இடம்பெறும் இடத்தினை சென்று நிறைவடைந்தது.

குறித்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதிவழங்கு, சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய் போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு பெருமளவான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம. தியாகராசா, இ. இந்திரராசாவும் கலந்து கொண்டனர்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஸ்பிரேமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02