பிரான்ஸின் பழை­மை­வாத கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பிரான்­கொயிஸ் பில்­லொனின் வீட்டில்  விசா­ர­ணை­யா­ளர்கள் முற்­று­கை­யிட்டு தேடுதல் நடத்­தி­யுள்­ளனர்.

அவ­ரது  மனை­வி­யான பென­லொப்­பிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்­த­தாக கூறப்­படும் போலி­யான தொழில் தொடர்­பான குற்­றச்­சாட்டின் நிமித்­தமே மேற்­படி தேடுதல் நடத்­தப்­பட்­டது.

பில்­லொனின் பாரா­ளு­மன்ற அலு­வ­ல­கத்தில்  கடந்த மாதம் தேடுதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் தான் எது­வித தவ­றையும் செய்­ய­வில்லை என வலி­யு­றுத்­தி­யுள்ள பில்லொன், ஜனா­தி­பதி  தேர்­த­லுக்­கான பிர­சா­ரத்தை தொடர்ந்து முன்­னெ­டுக்கப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார்.

பெனலொப் பில்­லொனுக்கும் அவ­ருக்கு முன் அந்தப் பத­வியை வகித்­த­வ­ருக்கும் பாரா­ளு­மன்ற உத­வி­யா­ள­ராக பல வருட கால­மாக சேவை­யாற்­றி­ய­தாக போலி­யாக காண்­பித்து 710,000  ஸ்ரேலிங் பவுணை ஊதி­ய­மாகப் பெற்­ற­தாக  லீ கானார்ட் என்­செயின் பத்­தி­ரிகை குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.  

பாரா­ளு­மன்­றத்­திற்குள் பிர­வே­சிப்­ப­தற்­கான அனு­மதி  அட்டை இல்­லாத நிலையில் அவர்  தனக்கு வழங்­கப்­பட்ட ஊதியத்துக்கான பணியை ஆற்றியுள்ளாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.