இராணுவத்தினரை தண்டிக்க சர்வதேசம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது : கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் :  அமைச்சர் தகவல்

Published By: MD.Lucias

04 Mar, 2017 | 10:27 AM
image

இராணுவத்தினர் குற்றமிழைத்திருப்பின் அவர்களுக்கு தண்டனை வழங்கவே சர்வதேசம் எமக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. எனவே குற்றமிழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தத்தை வெற்றிக்கொண்ட இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்துக்கு உள்ளது. இதனால் இராணுவத்தினருக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட இடமளிக்கமாட்டோம். 

இராணுவத்தினரை மின்சார கதிரை, சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றில் இருந்து நாங்களே காப்பாற்றியுள்ளோம்.

இதேவேளை யுத்தம் என்ற போர்வையில் ஒரு சில இராணுவத்தினர் குற்றமிழைத்திருப்பின் அவர்களை தண்டிப்பதில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

1971, 1989 ஆம் ஆண்டுகளில் குற்றமிழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட்டனர்.

 அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ இராணுவத்தில் எவரேனும் குற்றமிழைத்திருந்தால் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31