வழக்கு விசாரணை ஒன்றுக்கு வருகைத்தந்த நபரொருவர் நீதிமன்ற வளாகத்தில் உயிழந்த சோக சம்பவமொன்று கல்கிசை நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று இடம்பெற்றுள்ளது.

கல்கிசை நீதிமன்ற வளாகத்துக்கு தொழிற்சங்கம் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்றுக்காக இவர் வந்திருந்த போது இவர் திடீரென மயங்கி வீழுந்துள்ளார்.

இந்நிலையில் இவர் அம்யூலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்கு  அழைத்துச்செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பத்தரமுல்லை ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த லிஸ்பி தர்மவர்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.