இலங்கை வருகிறது அமெரிக்க கடற்படையின் மற்றுமொரு கப்பல்

Published By: Priyatharshan

03 Mar, 2017 | 03:51 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான யு எஸ் என் எஸ் போல் ரிவர் (USNS Fall River) திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

46 அம்ச பயிற்சி திட்டங்களை இலங்கை கடற்படையுடன் இணைந்து 13 நாட்கள் முன்னெடுப்பதற்காகவே அமெரிக்க கடற்படையின் ஆசிய கட்டளை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்த மீட்பு , அவசர உதவி மற்றும் மீட்பு போன்ற பிரதான திட்டங்களை முன் வைத்து அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினர் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்பட உள்ளனர்.

அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான யு எஸ் என் எஸ் போல் ரிவர் இவ்வாறான கூட்டு பயிற்சிகளில் தெற்காசியாவில் முன்னெடுக்கின்றமை இதுவே முதலாவது சந்தர்ப்பம் என அமெரிக்க கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். 

சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கிய பயணத்தை  வியாழக்கிழமை இந்தக் கப்பல் ஆரம்பித்தது. தெற்காசியாவில் முதலாவது மனிதாபிமான மற்றும் அனர்த்த, நிவாரண முன்னாயத்த ஒத்திகையை மேற்கொள்வதற்காக, அமெரிக்க கடற்படையின் இந்த அதிவேக போக்குவரத்துக் கப்பல் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10