மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, மருதானை நோக்கிச் செல்லும் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட  பெருமளவானவர்கள் இந்த பேரணியில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.