ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

இன்று வட கொரியாவின் அணு ஆயுத சோதனைத் தளத்திற்கு அருகில் 5.1 ரிச்டர் அளவு அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பை வட கொரியா அரச தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

குறித்த வெடிகுண்டு ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு என்று வட கொரியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.