இஸ்­லா­மா­னது 2070 ஆம் ஆண்­டுக்குள் கிறிஸ்­த­வத்தை விஞ்சி உலகின் மிகவும் பிர­ப­ல­மான மத­மாக மாறும் என புதிய ஆய்­வொன்று கூறு­கி­றது.

புலம்­பெ­யர்­வுகள் கார­ண­மாக ஐரோப்பா மற்றும் அமெ­ரிக்­காவில் முஸ்­லிம்­களின்  தொகை அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் 53  வருட காலப் பகு­தியில் உலக சனத்­தொ­கையில் முஸ்லிம்களின் தொகை­யா­னது  கிறிஸ்­த­வர்­களின் தொகையை விஞ்சும் என அமெ­ரிக்க வாஷிங்­டனை அடிப்­ப­டை­யாகக்கொண்டு  செயற்­படும் பியூ ஆராய்ச்சி நிலையம் தெரி­விக்­கி­றது.

உலகில் வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வரும் முஸ்­லிம்­களின் சனத்­தொகை 2010  ஆம் ஆண்டில் 1.6  பில்­லி­ய­னாக இருந்­தது.  இது  உலக மொத்த சனத்­தொ­கையின்  சுமார்  23  சத­வீ­த­மாகும். ஆனால் இந்த தொகை கிறிஸ்­த­வர்­களின்  தொகை­யுடன் ஒப்­பி­டு­கையில் சுமார் 2.2 பில்­லி­யனால் குறை­வாக உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் ஏனைய மதத்­த­வர்­களை விடவும் முஸ்­லிம்­களின் இன விருத்தி விகி­தா­சாரம் அதி­க­மா­க­வுள்­ளதால்  அவர்­களின் சனத்­தொகை மென்­மேலும் அதி­க­ரிக்கும் நிலை காணப்­ப­டு­வ­தாக  மேற்­படி ஆராய்ச்சி நிலையம் கூறு­கி­றது.

முஸ்லிம் பெண்கள் சாரா­ச­ரி­யாக 3.1  பிள்­ளை­களை  பெற்றுக் கொள்­வ­தாக தர­வுகள் கூறு­கின்ற நிலையில், ஏனைய அனைத்து மத குழுக்­களைச் சேர்ந்த பெண்­களும் சரா­ச­ரி­யாக 2.3  பிள்­ளை­க­ளையே  பெற்றுக் கொள்­கின்­றனர்.

உலகில் 62  சத­வீ­த­மான  முஸ்­லிம்கள் ஆசியபசுபிக் பிராந்­தி­யத்தில் வசிக்­கின்­றனர்.  அவர்­களில் பெரு­ம­ள­வானோர் இந்­தியா, பாகிஸ்தான்,பங்­க­ளாதேஷ், ஈரான், துருக்கி  ஆகிய நாடு­களில் வாழ்­கின்­றனர்.

2050  ஆம் ஆண்டில் உலக சனத்­தொ­கையில்  அதிக­ளவு முஸ்­லிம்­களைக் கொண்ட நாடாக இந்­தியா மாறும் என மேற்­படி ஆய்வு எதிர்­வு­கூ­று­கி­றது.

கடந்த வருடம் அமெரிக்­காவில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வுகளின் பிர­காரம் முஸ்­லிம்­களின்  தொகை 3.3  மில்­லி­ய­னாக இருந்­தது. இது அந்­நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒரு சத­வீ­த­மாகும்.  இந்த சத­வீதம் 2050  ஆம் ஆண்டில் 2.1  ஆக உயரும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  

2100 ஆம் ஆண்டில் உலக மொத்த சனத்தொகையில் கிறிஸ்த வர்களை விடவும் முஸ்லிம்கள் ஒரு சதவீதத்தால் அதிகமாக இருப்பார்கள் என பியூ ஆராய்ச்சி நிலை யத்தின் இந்த பிந்திய ஆய்வு கூறுகிறது.