உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நோர்வே வெளிவிவகார அமைச்சர்  போர்ஜ் பிரந்தே இவ்வாரம் இலங்கை வரவுள்ளார்.

இலங்கை மற்றும் நோர்வேக்கிடையிலான அரசியல் உறவை மேலும் கட்டியெழுப்பவே குறித்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வரும் நோர்வே வெளிவிவகார அமைச்சர்  இங்கு தங்கியிருக்கும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் நோர்வே அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.