கேப்பாபுலவின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டது என்ற மாயையை ஏற்படுத்தலாம் என்று அரசாங்கம் நினைக்கக்கூடாது எமது மண்ணில் இன்னும் பலநூறு ஏக்கர் நிலங்களை இராணுவம் விழுங்கியுள்ளது-கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் மண்மீட்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்றது!

கேப்பாபுலவு இராணுவம் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட்டுள்ளது என்று கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பின்மூலம் காட்டி உலகுக்கு மாயையை ஏற்படுத்தலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம் இன்னும் எமது கேப்பாபுலவு மண்ணில் பலநூறு ஏக்கர் நிலங்களில் இராணுவம் நிலைகொண்டு எம்மை அடக்கி ஆள்வதை எமது தொடர் போராடடம் மூலம் நாம் உலகுக்கு எடுத்து காட்டுவோம்.

எமது சொந்த மண்ணில் கால் பதிக்கும் நாள் வரை இந்த வீதியிலே இருந்து சற்றும் நகராது போராடுவோமென கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் பிரதான வாயில் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் போராட்டம் இரவுபகலாக இராணுவ குகைக்கு முன்பாக வீதி ஓரத்திலே கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று(03இ03) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.நேற்ற்று முன்தினம் காலை 128 குடும்பங்களிற்கு சொந்தமான 480ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கேப்பாபுலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாபுலவு பூர்வீக கிராமம் இசீனியா மோட்டைஇபிலக்குடியிருப்பு இசூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாபுலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள்இவீடுகள், பாடசாலை, வணக்கஸ்தலங்கள்விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள்வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10க்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து

பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.