கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கும் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் இந்துக்களுக்கிடையேயான சமர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியது.

இன்று காலை ஆரம்பமாகிய இப் போட்டி இரண்டு நாட்கள் நடைபெறும். இப் போட்டி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றது.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக கணபதி தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் தலைவராக கஜானந்த் செயற்படுகின்றார். இவ் வருடம் 2 ஆவது முறையாக நடைபெறுகின்ற இப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்புாகின்றது என்ற எதிர்பார்ப்பு இரு பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.