களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து சிகிச்சைப்பெற்றுவந்த பொலிஸ் அதிகாரியின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது.

இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது இடது காலின் முழங்காலுக்கு கீழ் பகுதி அகற்றப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட  7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.