புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸில்  கேரள கஞ்சாவை சட்டவிரோதமாக கொண்டுசென்ற சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த பஸ்ஸில் சோதனை மேற்கொண்ட நிலையில், குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 6 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.