பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாட்டிலுள்ள இலங்கைக்கான கொன்சியுலர் எலெக்ஸி குணசேகர வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விடயம் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடனும் தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரான்ஸிலுள்ள இலங்கையர்கள் அனர்த்தம் தொடர்பிலான உதவிகளுக்கு +33620505232 ஃ +33677048117 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.