சிறைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி போதை மருந்து தேடுதல் வேட்டை

Published By: Devika

02 Mar, 2017 | 05:17 PM
image

பிலிப்பீன்ஸ் சிறைச்சாலையொன்றில் பொலிஸார் நூற்றுக்கணக்கான கைதிகளை நிர்வாணப்படுத்தி போதை மருந்து தேடுதல் வேட்டை நடத்தியது மனித உரிமை செயற்பாட்டாளர்களை வெகுண்டெழச் செய்துள்ளது.

பிலிப்பீன்ஸில் போதை மருந்துப் பாவனையைத் தடுப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ ட்யூடர்தே கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளார். மரண தண்டனை வரை நீளும் இந்தச் சட்டங்கள் குறித்து சர்வதேசங்களும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, பிலிப்பீன்ஸின் செபு மாகாணத்தின் சிறைச்சாலையில், கைதிகளிடையே போதை மருந்து பாவனை இருப்பதாகக் கூறி போதை மருந்து தடுப்புப் பிரிவினரும், பொலிஸாரும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்போது, சிறையில் மறித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளும் முழு நிர்வாணமாக்கப்பட்டு சிறைச்சாலை அரங்கில் அமரவைக்கப்பட்டனர். பின்னர் கழிவறைகள் உட்பட சிறைச்சாலை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையும் போதை மருந்து தடுப்புப் பிரிவு இணையத்தில் வெளியிட்டது.

இதையடுத்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்தச் செயலுக்காக தமது கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

எனினும், இதன்போது மரிஜுவானா உட்பட போதை மருந்து பக்கெற்றுகள் சிலவற்றையும், அலைபேசிகள், கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்றபோதிலும், கைதிகளின் அந்தரங்கத்தைப் படம் பிடித்து வெளியிடுவது அவர்களது அடிப்படை உரிமைகளை மீறும் குற்றச்செயலாகும் என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10