அம்பாந்தோட்டை - கடுவன பிரதேசத்தில்  துப்பாக்கி மற்றும் ரவைகள் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களில் ஒருவரிடமிருந்த பயணப்பொதியை சோதனையிட்ட போதே துப்பாக்கி மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களிடமிருந்து டீ56 ரக துப்பாக்கி மற்றும் 15 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கியை வைத்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் சூரியவெவ மற்றும் பிங்கிரிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 38 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.