இன்றைய திகதியில் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சித்தியெய்த வேண்டும் என்ற ஒரே விடயத்தை சொல்லி சொல்லி அவர்களை உளவியல் ரீதியாக பாதிப்பிற்கு ஆளாக்கிவிடுகிறார்கள். மாணவர்களும் தேர்வு எழுதும் தருணத்தில் இவர்கள் சொன்ன விடயங்களை எண்ணி எண்ணி மனதில் இனம் புரியாத பயத்தினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

மருத்துவத்துறையில் இதற்கு 'சிஸோபெரினியா' என்று குறிப்பிடுவார்கள்.  அதாவது நடக்காத ஒரு சம்பவத்தினை நடந்து விட்டது போல் எண்ணி எப்போதும் அதன் தாக்கத்தில் இருப்பார்கள். இவ்வகையானபாதிப்பிற்கு எம்முடைய மூளையில் ஏற்படும் இரசாயன சமச்சீரின்மை நிலவுவதேக் காரணம். 

மாணவர்கள் தாங்கள் எழுதும் தேர்வில் சித்தியெய்துவதைக் காட்டிலும் அதிக மதிப்பெண் எடுத்து சித்தியெய்தவேண்டும் என்று தொடர்ச்சியாக எண்ணுவதால், இவர்களின் மூளையில் உள்ள சில செல்கள் எதிர்பாராத வகையில் உஷ்ணமடைகின்றன. இதனால் இயல்பாக சுரக்கவேண்டிய பீனியல் சுரப்பிகள் தங்களின் பணியில் தடுமாற்றம் அடைந்து, இத்தகைய பாதிப்பினை உருவாக்குகின்றன. இதன் போது பல மாணவர்களுக்கு கைகளிலும் குறிப்பாக உள்ளங்கைகளில் வியர்க்கும். சிலருக்கு உடல் சூடாகும். சிலர் உடல் சூடாகுவதாக உணர்வர். படபடப்பு ஏற்படக்கூடும். 

இதற்காக மன நல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைப் பெற சொன்னால் மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ சம்மதிக்கவேமாட்டார்கள். அதனால் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகும் மாணவர்கள், நாட்டு பசும் பாலில் தயாரான தயிரை நீர்மோராக்கி குடித்து வந்தால் இதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

இதனை தேர்வு கூடத்தில் பயத்துடன் இருக்கும் மாணவர்கள் மட்டுமல்ல நேர்முக தேர்வு, அலுவலகத்தில் உயரதிகாரி தேர்வு போன்ற தருணங்களிலும் அங்கு பணியாற்றுபவர்களுக்கு பயன்தரக்கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டொக்டர் சிவராமன்

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்