நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்கள் மத்தியில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் நிறுவனம், 2015ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த பத்து கூட்டாண்மை பிரஜை நிறுவனங்களுள் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சிறந்த கூட்டாண்மை பிரஜை 2015 இல் 15 பில்லியன் ரூபாவுக்கு குறைவான வருவாய் பிரிவில் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளது. நடுவர் குழு மூலம் கடுமையான தேர்வுகளுக்கு பின்னர் வழங்கப்பட்ட சிறந்த கூட்டாண்மை பிரஜை எனும் உயரிய நாமமானது இருபது வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிறுவனமாகிய எமக்கு நிச்சயமாக மிகப்பெரிய சாதனையாகும். 

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (Ceylon Chamber of Commerce)மூலம் தொடர்ந்து 12ஆவது ஆண்டாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விருதுகள் விழா வைபவத்தின் நடுவர் குழுவை புகழ்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவியலாளரும், முன்னாள் உதவி ஆளுநருமான மருத்துவர்.அனிலா டயஸ் பண்டாரநாயக்க தலைமை தாங்கியிருந்தார்.

இரு விருதுகளையும் பெருமையுடன் தாங்கியவாறு CDB இன் CEO/  முகாமைத்துவ பணிப்பாளருமான மஹேஷ் நாணயக்கார, 

“இவ்விரு விருதுகளுமே CDB அதன் வர்த்தக மாதிரி மீது கட்டமைத்த அசைக்கமுடியாத பொருளாதார மற்றும் சமூக அடித்தளத்தை சான்று பகர்வதாக அமைந்துள்ளது என்றார். 

மேலும் அவர், “நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும், உற்பத்தி மற்றும் வழங்கும் ஒவ்வொரு சேவையும் எப்போதும் பங்கு உரிமைதாரர்   (stakeholder) சார்ந்ததாக அமைகின்றன. உறுதியான நிதி அதிகாரமளிப்பு  (financial empowerment)மற்றும் சமூக உள்ளடக்கம் மீது எமது அடித்தளங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உறுதியளிப்பதையே செய்கிறோம் என்பதை CDB ஆனது சந்தேகத்திற்கிடமின்றி இந்த விருதுகள் ஊடாக நிரூபித்துள்ளது” என்றார்.

CDB இன் 20 வருட பூர்த்தி மற்றும் இரு தசாப்த காலமாக செயற்திறன் மிக்க வர்த்தக நிறுவனமாக பல்வேறு சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளதையிட்டும், இந்த விருதுகள் CDB இற்கு மிக விசேடமாக உள்ளது. NBFI துறையில் பொதுமக்கள் நிதிகளுக்கான மதிப்புமிக்க பொறுப்பாளர் எனும் அசைக்கமுடியாத அங்கீகாரமே CDB வர்த்தக மாதிரியில் மிகவும் பெறுமதி வாய்ந்த செயற்திறனாக காணப்படுகிறது. 

“நாம் பரந்துபட்ட புள்ளிவிபரங்களுடன்(demographics)செயலாற்றுகிறோம். எனினும், இந்த புள்ளிவிபரத்தரவுகள் எமது நிலையான நிகழ்ச்சி நிரலுடன் உறுதியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இலங்கை கரியமில அறக்கட்டளை மூலம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட கரியமில தட வர்த்தக மதிப்பீடுகளுக்கமைய, கரியமில குறைப்பு மீது அக்கறை கொண்ட வர்த்தக நிறுவனமாக சான்றளிக்கப்பட்டுள்ளோம். ‘CDB மிஹிகதட ஆதரென்’ எனும் அதன் பசுமை முயற்சி ஊடாக விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கையின் முதலாவது பசுமை சொத்து கடனீட்டுமயமாக்கல (Securitization)மற்றும் மீள்சுழற்சி பெற்ற நிறுவனமாகிய நாம் சூழல் பொறுப்புடைமை மற்றும் கூட்டாண்மை நிர்வாகத்திற்கு பெறுமதி சேர்த்து வருகிறோம்” என நாணயக்கார தெரிவித்தார்.

CDB இன் ஒவ்வொரு திட்டமும் இலக்கு வைக்கப்பட்ட பங்கு உரிமைதாரருக்கு பொருளாதார முன்னேற்றத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதேவேளை, CDB உற்பத்தி தொகுப்பானது எப்போதும் பொறுப்பு மற்றும் நன்னெறி தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளன. உயர் சாதனையீட்டிய இளம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமது கல்வியை தொடர்வதற்காக ‘CDB சிசுதிரி புலமைப்பரிசில்’ திட்டம், மென்திறன் (soft skill)மற்றும் நிபுணத்துவ நிகழ்ச்சிகள் ஊடாக இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் மற்றும் கற்கை முயற்சிகள், நாடுமுழுவதும் உள்ள வசதி குறைந்த பாடசாலைகளில் முழுவசதிகள் கொண்ட IT ஆய்வுகூடங்களை நிர்மாணிக்க ‘CDB பரிகனக பியஸ' (Pariganaka Piyasa) திட்டம், பெண்களின் முன்னேற்றத்திற்கு ‘CDB Diriliya’ திட்டம் மற்றும் ஊழியர் தொண்டர்களுக்கு ‘CDB Hithawathkam’ திட்டம் போன்ற சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. 

“சிறந்த கூட்டாண்மை பிரஜை விருது மற்றும் இலங்கையின் தலைசிறந்த பத்து நிறுவனங்களுள் ஒன்றாக கௌரவிக்கப்பட்டமையானது உண்மையாகவே எமக்கு பெருமைமிகு தருணமாக அமைந்துள்ளதுடன், நிலையான நிறுவனத்தை கட்டமைக்கும் எமது நோக்கத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு விருது விழாக்களில் எமது நிறுவனம் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளது” என நாணயக்கார வலியுறுத்தினார்.

CDB மூலம் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கநெறி கலாச்சாரம் என்பது அதன் நிதி உறுதி மற்றும் வலிமையை கட்டமைத்துள்ளதுடன், அதை ஒவ்வொரு ஆண்டிலும் CDB அதன் நிதி செயற்திறன் பதிவுகளில் வெளிப்படுத்தி வருகிறது. “எம்மை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய உந்துதலாக இவ்விரு விருதுகளையும் பயன்படுத்தவுள்ளோம். 

உணர்வுகள், பேரார்வம் மற்றும் உந்துசக்தி போன்ற எமது EPS சூத்திரத்தை தொடர்ந்து வலிமையாக்கி, முற்றிலும் மக்கள் சார்ந்த நிறுவனம் என்பதன் மீது கவனம் செலுத்தவுள்ளோம்” என மேலும் மஹேஷ் தெரிவித்தார்.