களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நம்பப்படும் அனைத்து சந்தேக நபர்களையும் தாம் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுத்துறை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

களுத்துறை - சிறைச்சாலை பஸ் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடள் 4 காயம் அடைந்திருந்தனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் சம்பவ இடம்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் வெள்ளை நிற வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உட்பட அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வேன் ஹொரணை - மொரகஹாஹென பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.