தோல்வியை ஒப்புக்கொண்ட அல்-பக்தாதி; எஞ்சியுள்ள ஐ.எஸ். உறுப்பினர்களை தற்கொலைதாரிகளாக மாறவும் வேண்டுகோள்

Published By: Devika

02 Mar, 2017 | 09:56 AM
image

ஈராக்கில் தாம் படுதோல்வியடைந்துவிட்டதை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல்-பக்தாதி ஒப்புக்கொண்டுள்ளார். ஈராக்கை விட்டு வெளியேறியுள்ள அவர், அதற்குச் சற்று முன்னதாக இந்தத் தகவலை விடுத்துள்ளார். மேலும், அரேபியர்கள் அல்லாத மற்ற ஐ.எஸ். உறுப்பினர்களைத் தத்தமது நாடுகளுக்குத் திரும்பும்படியும் அல்லது தற்கொலை குண்டுதாரிகளாக மாறி தாக்குதலில் ஈடுபடும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈராக்கில் ஐ.எஸ். வசமிருந்த நிலப்பரப்புக்களை மீட்டெடுத்த ஈராக்கிய இராணுவம், ஐ.எஸ். வசமிருந்த மொசூலின் கடைசிப் பகுதியையும் நேற்று கைப்பற்றியது. இதையடுத்து, தோல்வியை ஒப்புக்கொண்ட ஐ.எஸ். இயக்கத் தலைவர் அல்-பக்தாதியின் பேச்சு அடங்கிய குறிப்பு ஐ.எஸ். உறுப்பினர்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது.

அதில், தாம் ஈராக்கிய இராணுவத்திடம் தோல்வியடைந்துவிட்டதாகவும், இனி ஈராக்கில் நிலைகொண்டிருப்பதில் பயனில்லை என்றும், ஈராக்கில் தமது கட்டளை அலுவலகத்தை அகற்றிவிட்டதாகவும், அரேபியர்கள் அல்லாத உறுப்பினர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுமாறும் பக்தாதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்பாத போராளிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறி முடிந்தவரையில் ஈராக்கியப் படைகளுக்கு சேதத்தை ஏற்படுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து, ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25