கல்நேவ - சியம்பலா பிரதேசத்தை 2 வயது குழந்தை ஒன்று ஓடை ஒன்றில் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கிய குழந்தையை மீட்டு கல்நேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.