ரத்தொட - ரிவஸ்டன் பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாத்தறை - அபரக்க பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் ரத்தொட வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.