இலங்கை பதினொருவர் மற்றும் சுற்றுலா பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நாளை நடைபெறவுள்ள பயிற்சி போட்டிக்கு இலங்கை அணியிக் தலைவராக தினேஸ் சந்திமல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராகவும், உப தலைவராகவும் செயற்பட்ட தினேஸ் சந்திமல் கடந்த சில நாட்களாக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இதனால் சில போட்டிகளில் அவர் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

எனினும் அவரது துடுப்பாட்டத்தை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அவர் இலங்கை பதினொருவர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பதினொருவர் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பயிற்சி போட்டி நாளை மொரட்டுவையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.